×

‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட தென் மாவட்ட ரசிகர்கள்!

சென்னை: சென்னையில் இன்று (30.04.2023) சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தைக் காண மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் முன்னிலையில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது.

3 போட்டிகளில் தோல்வியடைந்து 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ( 30.04.2023) சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை இலவசமாக காண கன்னியாகுமரி முதல் சென்னை வரை மீண்டும் விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சியை சேர்ந்த 750 ரசிகர்களுக்கான அனைத்து செலவுகளையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ரசிகர்களை சிஎஸ்கே நிர்வாகம் கவனித்துக்கொண்ட விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். முன்னதாக இதற்காக ஏப்ரல் 14-ம் தேதி முதல் www.chennaisuperkings.com/wgistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி பதிவு செய்திருந்த சிஎஸ்கே ரசிகர்களை ஏற்றிக்கொண்டு நேற்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று காலை சென்னை வந்தடைந்திருக்கிறது. ரசிகர்களின் பயணச் செலவு, உணவு, தங்குமிடம், சிஎஸ்கே டி சர்ட் என அனைத்து செலவுகளையும் சி.எஸ்.கே நிர்வாகம் ஏற்றுக்கொண்ட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்த ரசிகர்கள், விசில் அடித்து சிஎஸ்கே குறித்த கரகோஷத்தை எழுப்பி உற்சாகமடைந்தனர்.

The post ‘விசில் போடு எக்ஸ்பிரஸ்’ மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட தென் மாவட்ட ரசிகர்கள்! appeared first on Dinakaran.

Tags : South District ,Chennai ,Whistle Express' ,CSK ,Punjab Kings ,Express ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதிக்கு...